VBAC என்றால் என்ன? 

VBAC என்பது, சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னரான யோனி வழி பிரசவத்தைக் குறித்து நிற்கின்றது. இது கடந்த காலத்தில் ஒருதடவை கருப்பை மேற்திறப்பு அறுவை சிகிச்சையை (சிசேரியன்) மேற்கொண்ட ஒரு  பெண்ணுக்கு  யோனி வழி மூலமான பிரசவம் இடம்பெறுவதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ஆகும்.

‘ஒரு தடவை சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பின்னர் யோனி வழி பிரசவத்தின் மூலமாக நான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?

Yes 

.அவ்வாறாக அல்ல என்பது பலரது பிழையான ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு கருப்பை மேற்திறப்பு அறுவை சிகிச்சைக்கு (சிசேரியன்) பின்னர் வெற்றிகரமான யோனி வழி பிரசவத்திற்கான சாத்தியப்பாடுகள் மிக அதிகம்.

VBAC ஆனது, எனக்கு சுகப்பிரசவமாக அமைவதற்கான சாத்தியப்பாடு எவ்வாறு உள்ளது?

VBAC உங்களுக்கு சுகப்பிரசவமாக அமைவதற்கான வாய்ப்பு 75 சதவீதத்தை விட அதிகபடியானதாக உள்ளது. அதாவது வாய்ப்பு மிகவும் அதிகம்.

கருப்பை மேற்திறப்பு அறுவைசிகிச்சை மேற்கொண்ட பின்னர் யோனி வழி சுகப் பிரசவத்திற்கான வாய்ப்பை எவ்வாறு நான் அறிந்து கொள்ள முடியும்?

பல்வேறு காரணிகள் இதனைத் தீர்மானிக்கின்றன.

  1. கருப்பை மேற்திறப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னரோ அல்லது அதன் பிற்பாடோ ஒரு சுகப்பிரசவம் உங்களுக்கு நடந்து இருத்தல்.
  2. உங்களுடைய பிரசவம் இயற்கையாக ஆரம்பித்து இருத்தல்.
  3. முன்னைய அறுவைச்சிகிச்சையானது குழந்தை தொடர்பான பிரச்சினைக்காக நிகழ்ந்து இருத்தல்.
  4. முன்னைய கருப்பை மேற்திறப்பு அறுவைச் சிகிச்சை 18 மாதங்கள் அல்லது அதற்கு முன்பு செய்யப்பட்டு இருத்தல்.           
  5. உங்களுடைய உடற் திணிவுச் சுட்டி 30ற்கு குறைவாக இருத்தல்.

மேற்குறித்த காரணிகள் கருப்பை மேற்திறப்பு அறுவை சிகிச்சைக்கு (சிசேரியன்) பின்னர் வெற்றிகரமான யோனி வழி பிரசவத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னரான யோனி வழி பிரசவம் (VBAC) நன்மைகள் என்ன? 

  • VBAC வெற்றிகரமானதாக அமைந்தால் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சைகயைத் தவிர்க்கலாம்.
  • பிரசவத்திலிருந்து உடல் தேறி வர மிகவும் குறைந்த காலம் போதுமானது.
  • கிருமித்தொற்றிக்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு. 
  • குறைந்தளவான இரத்தப்போக்கு சாத்தியம்.
  • குழந்தைக்கு  சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவானது குழந்தைக்கு  உடனடியாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கலாம். 
  • பல தாய்மார்கள் சுகப்பிரசவம் நிகழும் அனுபவத்தை விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்பை இதன் மூலம் வழங்க முடியும்.
  • இதற்கு பிந்திய உங்களது பிரசவமும் யோனி வழி பிரசவமாக அமைய  உயர் வாய்ப்பு உள்ளது.
  • பல கருப்பை மேற்திறப்பு அறுவை சிகிச்சைகள், இவற்றின் போது குடல் மற்றும் சலப்பையில் ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் எதிர்காலத்தில் நஞ்சுக்கொடியில் உண்டாகக்கூடிய பிரச்சினைகளை யோனி வழி பிரசவத்தின் மூலமாக தவிர்த்துக் கொள்ளலாம்.

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னரான யோனி வழி பிரசவம் (VBAC) பொருத்தமான நபரா என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? 

  • கருப்பை மேற்திறப்பு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர்களில் மிகச்சறிய அளவு தாய்மார்கள் இதற்குப் பின்னரான யோனி வழி பிரசவத்திற்கு பொருத்தமற்றவர்கள். 
  • உங்களது முன்னைய மருத்துவப் பதிவுகள்  அனைத்தும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்ட பின்பு நீங்கள்  இதற்கு உட்படுத்தப்படுவது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உங்களுடைய மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள்.

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னரான யோனி வழி பிரசவம் (VBAC) சந்தர்ப்பங்களில் பொருத்தமற்றது?

  • நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேலான தடைவை கருப்பை மேற்திறப்பு அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால்.
  • கருப்பையில் குழந்தை பெற்றுக் கொள்வது தவிர வேறு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால். 
  • வேறு காரணங்களுக்காக கருப்பை மேற்திறப்பு அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால்.

நீங்கள் பொருத்தமற்றவர்.

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னரான யோனி வழி பிரசவம் (VBAC) பாதுகாப்பானதா?

சிசேரியன் சிகிச்சையின் போது கருப்பையில் ஏற்படும் தழும்பு கருப்பை மேற்திறப்பு அறுவை சிகிச்சைக்கு (சிசேரியன்) பின்னரான யோனி வழி பிரசவத்தின் போது விரிவடையும் சந்தர்ப்பம் மிக குறைவு. இது 200 தாய்மாரில் ஒருவருக்கே நிகழும்.

பிரசவத்தின் போது நீங்கள் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் கண்காணிக்கப்படுவீர்கள். இதனால் கருப்பை தழும்பு விரிசல் நிகழ்ந்தால் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியும்.

25 சதவீதமானோருக்கு மட்டுமே பிரசவத்தில் முன்னேற்றமின்மை மற்றும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக கருப்பை மேற்திறப்பு அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படக் கூடும். 

சிசேரியன் அறுவை  பின்னரான யோனி வழி பிரசவம் (VBAC) ற்காக நான் எவ்வாறு என்னைத் தயார் படுத்த முடியும்? 

  • நீங்கள் VBAC ற்காக தயாராகுவதற்கு கர்ப்பகாலத்தில் வேறுபட்ட விடயங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை
  • நீங்கள் பெறும் கர்ப்பகால பராமரிப்பானது ஒரு சாதாரண கர்ப்பம் தரித்த பெண்ணிற்கு  வழங்கப்படுவது  போன்றதாகவே  இருக்கும்.
  • கர்ப்ப கால வகுப்புகளில் பங்கேற்பது பிரசவம் தொடர்பான நல்ல விளக்கத்தையும் யோனி வழி பிரசவம் தொடர்பான நேர்மறையான மனப்பாங்கினையும் உருவாக்கும்.
  • நீங்கள் மற்றைய தாய்மார்கள் போலவே கர்ப்பகால உடற்பயிற்சிகளில் பாதுகாப்பாக பங்கு கொள்ள முடியும்.

என் பிரசவத்தின் போது எதுவும் வித்தியாசமாக செய்யப்படுமா?

  • உங்கள் பிரசவ வலியானது தூண்டப்படுவதை விட இயற்கையாக உண்டாகுவது விரும்பத்தக்கது.
  • நீங்கள் உங்களது  பிரசவத்தின் போது உன்னிப்பாக கண்காணிக்கப்படுவீர்கள்.
  • உங்களது கையில் தேவை ஏற்பட்டால் மருந்து ஏற்றக்கூடியவாறு ஒரு பிளாஸ்டிக் வடிகுழாய்( Canula) செருகிப்பட்டிருக்கும். 
  • பிரசவ வலி நிவாரணிகள் மற்றும் நோவுத் தணிப்பு என்பன மற்றைய சாதாரண தாய்மார்களுக்கு வழங்குவது போன்று உங்களுக்கும் வழங்க முடியும்.

எனக்கு ‘எதிர்பார்க்கப்பட்ட பிரசவ திகதியை” நான் கடந்த சென்றால் என்ன செய்வது?

  • உங்களது பிரசவத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட திகதியை அடைந்த பின்னரும் வலி ஏற்படவில்லை என்றால் மேலும் ஒரு வாரம் காத்திருப்பது பாதுகாப்பானது.
  • இந்த நேரத்தில், பெரும்பாலும் உங்களுக்கு இயற்கையாகவே பிரசவ வலி ஆரம்பிக்கும். இது VBAC க்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.

பிரசவத்தின் போது பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது?

  1. முன்னைய அறுவைச் சிகிச்சை வடு உள்ள இடத்தில்  கருப்பையில் விரிசல்  ஏற்படக்கூடிய அபாயம் மிக மிகக் குறைந்தளவு உள்ளது. இவ்வாறான சந்தர்பத்தில் உடனடியாக கருப்பையில் மேற்திறப்பு சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படும்.
  2. பாரதூரமான விளைவுகள் உங்களுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏற்படும் வாய்ப்பு மிகவும் அரிது.

Your Obstetrician will carefully assess you and discuss the options with you before your agreeing for VBAC 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *